பூமி படத்தின் விமர்சனம் – ஜெயம் ரவியின் சிறப்பான சம்பவம் !

698

பூமி..

நாசாவில் வேலை பார்க்கும் நம்ம தமிழ் விஞ்ஞானி ஜெயம் ரவி, 1 மாச லீவுக்கு நம்ம ஊருக்கு வந்து நாசமா போன படமே பூமி. கைய கால்ல வெச்சுக்கிட்டு சும்மா இல்லாமல், செவ்வாய் கிரகத்துல கூட நம்ம ஆளுங்க சர்வ சாதாரணமாக வாழலாம் , அங்கயும் மரம், செடி, கொடின்னு நட்டு விவசாயம் பண்ணலாம்னு அதற்கான முயற்சியில் இறங்குகிறார் நம்ம பூமிநாதன் ( ஜெயம் ரவி பெயராம்).

திடீரென கதையை மேலும் நகர்த்த நம்ம ஊர பார்த்துட்டு போவோம்னு தன் சொந்த மண்ணுக்குத் திரும்புகிறார். அங்க தான் Director ஒரு Twist வைக்கிறார். தன் மண்ணுக்கு திரும்பிய ஜெயம் ரவிக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி.

ஏன் என்றால், விவசாயிகளும் விவசாயமும் படும் கஷ்டத்தை கண்டு விஜய், ஐஷ்வர்யா ராஜேஷ், சூர்யா, மற்றும் பல ஹீரோக்கள் போல கண் கலங்குகுறார் ரவி. உடனே இதை மாற்ற வேண்டும் என, தனது வேலையைக் கைவிட்டு, இதான் சாக்குனு சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.

எல்லா படத்துக்கும் வில்லனா யாரை போடலாம்னு யோசிக்கும்போது Ready-made கதாபாத்திரமாக நம்ம இயக்குனர்களின் மைண்டுக்கு வருவது Corporate நிறுவன முதலாளி. இதிலும் ஒரு Corporate நிறுவன முதலாளியுடன் நேரடியாக மோதி தன் நாட்டு வளத்தை அந்நிய சக்த்தியிடம் காப்பாற்றுகிறார்.

ஆழமான ஷங்கர் படங்களும், ஆவேசமான சீமான் மேடை பேச்சும் பார்த்து Inspire ஆகி Overnight-இல் ஸ்கிரிப்ட் எழுதி முடித்துள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மண். மருந்துக்கு கூட ஒரு கை தட்ட வைக்கும் காட்சி இல்லை. அப்போ அப்போ காதல், அப்போ அப்போ நாட்டு மக்கள், அப்போ அப்போ Corporate வில்லன்னு அங்கும் இங்கும் Confuse ஆகி அலைபாகிறார் ரவி.

கதை என்ன என்றால், வழக்கம் போல் கோலா, கார், ஜீன்ஸ் ஃபேக்டரிகள் தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடியில் நீர் தண்ணீர் இல்லை, அதனால் விவசாயம் செய்யமுடியவில்லை. அதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அதனால் அவர்கள் தற்கொலை செய்கிறார்கள், இதனால் ஜெயம் ரவிக்கு கோபம் கண்ணுல கனலா வந்து எதிரியை துவம்சம் செய்வதே கதை.

பாதி படம் வில்லனும், ஜெயம் ரவியும் போனிலேயே சவால் விடுவதிலியே காட்சிகள் போகிறது. வில்லன் என்ன தடை போட்டாலும் அதை தனது நாசா விஞ்ஞானி மூளையால் உடைத்துக் தகர்க்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சதீஷ் எனப் பலர் இருந்தும் No comments. D. இமான் இசை என்று Title Card-இல் தான் இருக்கிறது.

இன்னும் தனி ஒருவன் மித்ரன் IPS கதாபாத்திரத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியில் வராதது வருத்தமே. ஆக, இப்படி Corporate நிறுவனத்தை எதிர்த்து கார்பரேட் நிறுவனமான Hotstar-லியே ரீலிஸ் பண்ணார் பாரு அதான்லே ஜெயம் ரவி.