தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை!

68

தனுஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. டி 43 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று தமன்னா என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை தமன்னா தனுஷுடன் படிக்காதவன், வேங்கை படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். நானே வருவேன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைகிறார் தமன்னா.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.