6 மொழிகளில் தயாராகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் அறிவிப்பு!

124

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

மேலும் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் ஆறு மொழிகளில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் தயாராக உள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

என்னுடைய பிறந்த நாளில் இந்த புதிய திரைப்படத்தின் டைட்டிலை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் இந்த படம் விரைவில் உங்களது ஆசியுடன் தொடங்க இருப்பதாகவும் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை கிஷோர் பண்டுரங் பெலேகர் என்பவர் இயக்க இருப்பதாகவும் மூவி மில் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது அவருடைய மூன்றாவது பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.