‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்: விஜய், விஜய் சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்?

92

மாஸ்டர்…

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் இதன் ரீமேக் உரிமையை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் Endemol என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் நடித்த ஜேடி என்ற பேராசிரியர் கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு சில ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரது கேரக்டரை அவரே நடிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த மெகா பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பாலிவுட் திரையுலகில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படமும் இந்தியில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.