‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

93

வலிமை…

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சரியான நேரத்தில் ’வலிமை’ படத்தின் அப்டேட்கள் வரும் என்று ரசிகர்களை சமாதானப்படுத்தினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி ’வலிமை’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் அதன் பின்னர் ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் வரை வெளிவந்து கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி, அம்மாவாக சுமித்ரா மற்றும் வில்லனாக கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.