நயன்தாராவாக மாறிய பிரபல பாலிவுட் நடிகை.. நீங்களே பாருங்க அதை..!

113

நயன்தாரா…

தென்னிந்தியளவில் முன்னணி கதாநாயகியாகவும், இந்தியளவில் பிரபலமான நடிகையாகவும் விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

ஆம் ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல், தனக்காக சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

அப்படி நயன்தாராவின் சோலோ நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. ஆம் நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படம் சூப்பர்ஹிட்டானது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். ஹிந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் நயன்தாராவாக, ஸ்ரீதேவியின் மகள் இளம் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவாக மாறிய நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.