ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த யோகேஸ்வரன் நினைவாக பரிசு.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ராகவா லாரன்சின் பரிசு..!

58

ராகவா லாரன்ஸ்…

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் விழாவில் தமிழக மக்களால் பெரிதும் கொண்டாடப்படுவது தான் ஜல்லிக்கட்டு.

இதில் சீறி பாயும் காளைகளை துணிச்சலாக முன் நின்று அடக்கி வரும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அந்தந்த கிராமத்தில் இருந்து பரிசுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரெயிலில் ஏறி போராட்டம் செய்த போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.