புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த நடிகை!!

791

நடிகை சரண்யா

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

கேரளாவில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதிலிருந்து தற்போது வரை 7 முறை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டார். இவருடைய சம்பளத்தில் மட்டுமே குடும்ப செலவுகள் அனைத்தும் கவனிக்கப்பட்டு வருவதால், 8வது முறை அறுவை சிகிச்சை செய்வதற்கு போதிய பணம் இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை வைத்தார்.

அதனை பார்த்த சில நடிகர்கள் அவருக்கு பண உதவி கொடுக்க முன்வந்தனர். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை சரண்யா கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த சேவையினை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதேபோல நடிகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண நிதியினை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.