கோடி கோடியாய் வசூல் குவித்த மாஸ்டர்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

513

மாஸ்டர்…

விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் 4 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ.4.39 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் வெளியான படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், பூவையார், ரம்யா சுப்பிரமணியன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைதி படத்தைப் போன்று இந்தப் படத்திலும் இருட்டு, லாரி, வாளி, போதைப் பொருள் அவரது சாராம்சம் இடம் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்தை விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் பாதி, பாதியாகவே பிரித்துக் கொண்டுள்ளனர். ஆம், முதல் பாதியை விஜய்க்குரிய படமாகவே எடுத்துள்ளார். இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் தனக்குரிய படமாகவே எடுத்துள்ளார். அதில், கொஞ்சம் விஜய்யின் நக்கல், நய்யாண்டியை பாடலாக கொடுத்துள்ளார்.

ஆம், டி ராஜேந்தர் பாடும் வாடா என் மச்சி வாழக்கா பச்சி என்ற பாடலை பாடியுள்ளார். எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த சினிமா ரசிகர்கள், பிரபலங்களுக்கு மாஸ்டர் படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற மாஸ்டர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கேரளா, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் வசூலில் சாதிக்க ஒன்றும் தவறவில்லை.

உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று வர்த்தக ஆய்வாளர் கௌசிக் எல் எம் கூறியுள்ளார். இந்த நிலையில், சென்னையில் மட்டும் 4 நாட்கள் முடிவில் ரூ.4.39 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று கௌசிக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ரூ.1 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.