விஷ்ணு விஷால் நடிக்கும் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் !

66

இன்று நேற்று நாளை………

தமிழ் திரையுலகின் முதல் டைம் ட்ராவல் திரைப்படமான இன்று நேற்று நாளை திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இந்த பாகத்திலும் கதாநயகனாக நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்திலேயே நடிக்க உள்ளனர்.

இரண்டாம் பாகத்தை, முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.