ராஜமவுலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

111

ஷங்கர்…

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண், ஷங்கரின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பவன் கல்யாணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

தற்போது நடிகர் ராம் சரண் தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.