உலகளவில் நம்ம தளபதி விஜய் தான் டாப்பு- படு கொண்டாட்டமான தகவல்!

81

விஜய்…

கொரோனா நோய் தொற்று காரணமாக எல்லா திரையரங்குகளும் மூடப்பட்டது.

அதன் தாக்கம் கொஞ்சம் குறையவே திரையரங்குகளில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது, வசூலிலும் செம கலெக்ஷன் தான். 5 நாட்களில் சென்னையில் மட்டுமே படம் ரூ. 5.43 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில் உலகளவில் இதுவரை வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதிகம் வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் #MasterTheGlobalTopper என்ற டாக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர்.