பைக்கிலேயே அஜித் அங்கு வரை சென்றுள்ளாரா?- எப்போது சென்னை ரிடர்ன் தெரியுமா?

55

அஜித்…

விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்ததால் கொண்டாட்டத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் வசூலிலும் படம் கலக்கி வருகிறது.

ஆனால் தல ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித்தும் படப்பிடிப்பில் காயங்கள் ஏற்பட்டாலும் அதை பொறுட்படுத்தாமல் நடித்து வருகிறார்.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அமைதி காத்து வருகின்றனர். இந்த நேரத்தில் தான் அஜித் குறித்து ஒரு தகவல். அவர் தனது பைக்கிலேயே பல இடங்களில் சென்று வருவது நாம் கேள்விப்படுகிறோம்.

அண்மையில் அவர் தனது பைக்கிலேயே சிக்கிம் வரை சென்றுள்ளாராம். விரைவில் சென்னை திரும்புவார் என்கின்றனர்.

மொத்தமாக அவர் 4500 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்ய இருக்கிறாராம்.