பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்!

78

ரைசா வில்சன்…

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார்.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.

தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் போன்ற படங்களை நடிகை ரைசா, கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு பிகினி உடையில் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.