‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா? – அருண் விஜய் தரப்பு விளக்கம்!

379

தளபதி 65…

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் அஜித்தின் என்னை அறிந்தால், பிரபாஸின் சாஹோ போன்ற படங்களில் வில்லனாக நடித்த அருண் விஜய், அடுத்ததாக தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இதனை அருண் விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இது வெறும் வதந்தி எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.