பிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

80

சனம் ஷெட்டி…

பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. தற்போது இவர் நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப் தொடர் வருகிற ஜனவரி 22-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதில் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

மேலும் அசோக், செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜபாண்டி மற்றும் தனுஷ் இணைந்து இயக்கி உள்ளனர்.

கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நேற்று வெளியான ‘குருதிக்களம்’ வெப் தொடரின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.