98 வயதில் கொரோனாவை வென்ற பிரபல நடிகர் காலமானார்!

725

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி…

கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்.

கமல் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

98 வயதாகும் இவர், சமீபத்தில் கொ.ரோ.னா தொ.ற்.றால் பா.தி.க்.கப்.பட்டு சி.கி.ச்சை பெற்றார். பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்தார்.

இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணமடைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.