கமல் பிராண்டை விமர்சனம் செய்த சுசித்ரா: பதிலடி கொடுத்த நெட்டிசன்!

78

சுசித்ரா…

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஒரு பிராண்டை அறிமுகப்படுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த பிராண்டை மோசமாக விமர்சனம் செய்த பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுசித்ராவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது கதர் ஆடை குறித்து கமலஹாசன் பேசி வந்தார் என்பது தெரிந்ததே. அவர் ஏன் கதராடை குறித்து பேசினார் என்பது இறுதி நிகழ்ச்சியில் தான் அனைவருக்கும் புரிந்தது.

கமல்ஹாசன் ’ஹவுஸ் ஆஃப் கதர்’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கான லோகோவை வெளியிடுவதாகவும் இறுதி நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்த நிறுவனத்தின் மூலம் நெசவாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் அனைவருக்கும் கதராடை கிடைக்கும் வகையில் வழி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் கதர் ஆடையே கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுசித்ரா இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் மோசமான விமர்சனம் ஒன்றை செய்திருந்தார். கமல்ஹாசன் கொடுத்த துணி கதர் இல்லை என்றும் அதுவொரு சிந்தடிக் துணி என்றும் கமல்ஹாசனின் முட்டாள்தனமான பிராண்ட் மற்றும் கேவலமான ரசனையுடன் கூடிய டிசைன் தனக்கு கொடுக்கப்பட்டது என்றும் சிந்தடிக் என தெரிந்தும் அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள் என்றும், இந்த ஹவுஸ் ஆப் கதர் நிறுவனத்திற்காக அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் ஹவுஸ் ஆஃப் கதர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், ‘சுசித்ரா அணிந்தது கதர் ஆடை தான் என்றும் ஆனால் அவர் விரும்பியவாறு அவர் அணிந்த சட்டை மட்டும் கதர் ஆடையான அவர் அணிந்து இருந்தார் என்றும் பதிலளிக்கப்பட்டது. இதன்மூலம் சுசித்ராவின் பொய் அம்பலமானது என்று நெட்டிசன்கள் சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.