சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் நடிகை.. ஹீரோ யார் தெரியுமா?

132

பிக் பாஸ் பிரபலம்…

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். தற்போது இந்த நிறுவனத்தின் கீழ் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த என முன்னை நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

அதே சன் பிக்சர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மற்ற பல திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு படத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கதாநாயகியாக பிகில் பட நடிகை அமிர்தா அய்யர் நடித்து வருகிறார்.

இப்படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறாராம். இதுமட்டுமின்றி மற்றொரு பிக் பாஸ் பிரபலம காமெடி நடிகர் டேனியல் நடித்து வருகிறார்.