பிக்பாஸ் ஆரியின் அடுத்த படத்தில் சரத்குமார் வில்லனா?

57

ஆரி…

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே ’அலேகா’, ‘பகவான்’ மற்றும் ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஆரிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொ ண் டிருக்கின்றன.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே ஒரு புதிய படத்தில் நடிக்க ஆரி ஒப்பந்தமானார். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் உதவியாளர் ஹரிஹரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் முதல் முறையாக போ லீ ஸ் அ திகாரி வேடத்தில் ஆரி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் சரத்குமார் என்பவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘அங்கமாலி டைரீஸ்’ என்னும் மலையாளப் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை பெற்ற இவர், விஷாலின் ’சண்டக்கோழி’ மணிரத்னம் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ’ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.