தென்னிந்திய நடிகைகளில் சமந்தாவுக்கு கிடைத்த முதல் பெருமை!

65

சமந்தா…

மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படங்களின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருவதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். குறிப்பாக சமூக வலைதளங்களில் வித்தியாசமான புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது டுவிட்டரில் எமோஜி பெறப்படுவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. விஜய் நடித்த மெர்சல், ரஜினிகாந்த் நடித்த ’காலா’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ பிரபாஸ் நடித்த ’சாஹோ’ ஆகிய படங்கள் ரிலீசானபோது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக நடிகை ஒருவரின் படம் ரிலீசாகும்போது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா நடித்துள்ள ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த தொடரின் புரமோஷனுக்காக டுவிட்டரில் சமந்தா படத்தின் எமோஜி பெறப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகை ஒருவருக்கு டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பதும் அந்தப் பெருமை சமந்தாவுக்கு தற்போது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சமந்தா ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.