சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த டாப் அப்டேட்!

95

டாக்டர்…

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தார் என்பதும் ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இதில் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு மட்டுமன்றி போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’டாக்டர்’ படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுக்கும் விருந்தாக அந்த படத்தின் டீசர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரியங்கா அருள் என்பவர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றாலும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் சுமார் 10 மாதங்கள் நடைபெறும் என்பதால் இந்த வருட இறுதியில் தான் அயலான் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.