விஷாலின் ‘சக்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

99

சக்ரா…

விஷால் நடித்து முடித்துள்ள ‘சக்ரா’ என்ற திரைப்படம் ரிலீஸ்க்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரே தயாராகி விட்டது என்றாலும் இந்த படம் குறித்த வ ழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனது. தற்போது நீதிமன்றம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துவிட்டதை அடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

முதலில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது என்பதும் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 12 என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிப்ரவரி 12 முதல் இந்த படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.