அந்தாதூன் மலையாள ரீமேக்: முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நாயகி!

59

அந்தாதூன்…

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும், ’அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ஜேஜே பெடரிக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் தமிழை அடுத்து அந்தாதூன் மலையாள ரீமேக் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழில் பிரசாந்த் நடிக்கும் முக்கிய வேடத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ உள்பட பல படங்களில் நடித்த ராஷிகண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஒரிஜினல் அந்தாதூன் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.