கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு!

55

கீர்த்திசுரேஷ்…

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பிரபல மலையாள பட தயாரிப்பாளர் என்பது பலரும் அறிந்ததே.

இவர் மலையாளத்தில் ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் இவர் தயாரித்த ’குபேரன்’ என்ற மலையாள படத்தில் தான் நடிகையாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுரேஷ்குமார் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ‘வாஷி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்க உள்ளனர்

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான டோவினோ தாமஸ் தமிழில் ’மாரி 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விஷ்ணு ஜி.ராகவ் என்பவர் இயக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.