‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி!

65

மாஸ்டர்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகளுக்கு மக்கள் வருவதற்கே பயப்பட்ட நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ படம் மக்கள் மத்தியில் பயத்தை போக்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி இந்த படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் அவர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் மக்களுக்கும் மிகவும் நன்றி.

திரும்பவும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் பல பேருக்கு வாழ்க்கையை தொடங்கி வைத்துள்ளது, நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க நன்றாக வந்ததற்கு விஜய் அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ’மாஸ்டர்’ திரைப்படம் விஜய்சேதுபதி படம் என ரசிகர்கள் கூறி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன? என நிருபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேட்ட கேள்விக்கு,

‘நான்தான் ஏற்கனவே இந்த படம் விஜய் சார் அவர்களால் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று சொல்லிவிட்டேனே, அதன் பிறகு இந்த கேள்வி அவசியமில்லாதது’ என்று சாதுர்யமாக கூறினார்.