‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!!

40

அண்ணாத்த…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இந்த படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது படக்குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டது என்பதும் அதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்குப் பின்னரே தொடங்கும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த வருட தீபாவளி ’தலைவர் தீபாவளி’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது