டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி!!

76

விட்டரில் டிரெண்ட் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை…….

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலின் ஹேஷ்டேக் மற்றும் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஹேஷ்டேக் ஒரே நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளதால் பெரும் ப ர பரப்பு ஏற்பட்டுள்ளது

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான நிலையில் வாத்தி கம்மிங் பாடல் இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாத்தி கம்மிங் என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

அதேபோல் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இயக்குனர் எச். வினோத் உள்பட படக்குழுவினர் பலர் உள்ளனர்.

இந்த புகைப்படமும் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ ஹேஷ்டேக்கை வைரல்லக்கி வருகின்றனர். விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு ஹேஷ்டேக்குகளை வைரலாகி வருவது பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது