சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு!!

60

சிவகார்த்திகேயன்………..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்று முன்னர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் ’டான்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ’டாக்டர்’ படமும் அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து ’அயலான்’ திரைப்படமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது