கதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா?

68

வனிதா………

தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின்னர் ராஜ்கிரணின் ’மாணிக்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த வனிதா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ப ர பரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வனிதாவுக்கு தொடர்ந்து தொலைக்காட்சியில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பாபி சிம்ஹா நடித்த ’பா ம் பு சட்டை’ என்ற படத்தை இயக்கிய ஆதம்தாஸன் என்பவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வனிதா நாயகியாகவும், முக்கிய வேடத்தில் கருணாகரனும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக வனிதா தனது உடல் எடையை குறைத்து ஹேர்ஸ்டைலையும் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமாகிய வனிதா விஜயகுமார் தற்போது 25 வருடம் கழித்து மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது