மீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா “ஃபீல்” பண்ணியிருக்காரு தேவா!

102

வாழ்………

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வாழ்’ படத்தில் தேனிசை தென்றல் தேவா பாடியுள்ள “Feel Song” ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

அருவி எனும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

அவர் இயக்கியுள்ள “வாழ்” படத்தில் தேனிசை தென்றல் தேவா இப்படியொரு அழகான பாடலை பாடி இருப்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்றே சொல்ல வேண்டும்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்

அருவி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி உள்ளது வாழ் திரைப்படம். கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப் போனது. பயணத்தையும் பாலிடிக்ஸையும் இந்த படம் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபீல் சாங்

விரைவில் திரையில் வெளியாகவுள்ள வாழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Feel Song பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைப்பில் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பாடல் வரிகளை எழுத தேனிசை தென்றல் தேவா நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான பாடலை பாடியுள்ளார்.

தேனிசை தென்றல் தேவா

ஹார்ட் டு ஃபீல் என ஆங்கில வரிகளில் தொடங்கும் இந்த ஃபீல் சாங்கை ரொம்பவே ஃபீல் பண்ணி பாடியுள்ளார். வீட்டுக்குள்ளத்தான் முகத்த மறைக்கிற, காசுக்காகத்தான் மனச ஒளிக்குற.. ஓடிடியில வாழ்க்கை ஓட்டுற.. மொபைலுக்குள்ள மாட்டிக்கிட்ட என வித்தியாசமான வரிகளை தனது காந்தக் குரலால் பாடி தெறிக்கவிட்டுள்ளார் தேவா.

டபுள் ட்ரீட்

அருவி படத்துக்கு அப்புறம் அந்த இயக்குநர் அடுத்து என்ன மாதிரியான படத்தை கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வாழ் படம் விரைவில் வெளியாக போகிறது என்கிற அறிவிப்புடன் தேவாவின் மாயக்குரலில் ஃபீல் சாங்கும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது.