கபாலி பட ஸ்டைலில் செம ஸ்டைலிஷாக மி ர ட்டும் சசிகுமார்.. வைரலாகும் கெ த் தான புகைப்படம்!!

91

சசிகுமார்……..

தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். ஆனால் சமீபகாலமாக சசிகுமார் எதிர்பார்த்த அளவுக்கு அவரது படங்கள் வெற்றிகளை பெறவில்லை. இருந்தாலும் அவரது மார்க்கெட்டுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் கைவசம் படங்கள் உள்ளன.

அந்த வகையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்ஜிஆர் மகன் தான் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் பொன்ராம்.

முன்னதாக எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜவம்சம் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் மகன் படத்தின் வெற்றிதான் சசிகுமாரின் அடுத்தடுத்த படங்களுக்கான மார்க்கெட்டை நிரூபிக்கும் என்பதால் அந்த படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கவனமாக உள்ளாராம்.

இதனால் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய எம்ஜிஆர் மகன் திரைப்படம் தற்போது வரை சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் சசிகுமார்.

கிராமத்து கெட்டப்பில் பார்த்து பார்த்து பழகிப் போன சசிகுமார் தற்போது கொஞ்சம் சிட்டி கெட்டப்புக்கு மாற, தொடர்ந்து பல போட்டோ ஷூட் எடுத்து வருகிறார். அந்த வகையில் கபாலி ஸ்டைலில் கோட் சூட் போட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.