இன்று OTT-யில் வெளியாகும் மாஸ்டர் படத்தில் மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? முழு விவரம் இதோ…

82

மாஸ்டர்……

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அமேசானில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் சென்சார் கட் இல்லாத படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சென்சாரில் கட் செய்யப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் உடன் கூடிய மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.