வலிமை படத்தில் அமைந்துள்ள பைக் ரேஸ் காட்சிகள், செம்ம உற்சாகத்தில் ரசிகர்கள் புகைப்படத்துடன் இதோ..

393

வலிமை……

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் அதில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் தல அஜித் மற்றும் இன்னும் ஒருவர் பைக்கில் உள்ளார்.

இதை வைத்து ரசிகர்கள் வலிமை படத்தில் வேற லெவல் பைக் ரேஸிங் சீன் இருக்கும் என கூறிவருகின்றனர்.