‘அண்ணாத்த’ படத்தை முந்துகிறதா ‘தளபதி 65?

123

தளபதி 65…….

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ’தளபதி 65’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு முன்பாக வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, ஏற்கனவே விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் ‘அண்ணாத்த’ மற்றும் ‘தளபதி 65’ ஆகிய இரண்டு படங்களும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படம் என்பதால் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை என்பது உறுதியானது

இதனை அடுத்து ’தளபதி 65’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தளபதி 65’ திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விஜய் அவர்கள் இந்த ஆண்டே ‘தளபதி 65’ திரைப்படம் வரவேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் இதனையடுத்தே படக்குழுவினர் தற்போது ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது

அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் தளபதி விஜய்யின் இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது