பிக்பாஸில் இருந்து வெளியே வந்த சோமிற்கு திடீரென திருமணமா?- புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

63

சோமசேகருக்கு திருமணம்…………

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களுக்கு ஒரு பார்ட்டி நடந்தது, அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் கூற்றி வந்தன.

இப்போது பிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அண்மையில் நடந்தது, அப்புகைப்படங்களும் அதிகம் ஷேர் ஆகின.

தற்போது என்னவென்றால் பிக்பாஸ் புகழ் சோமசேகருக்கு திருமணம் என செய்தி பரவுகிறது. இதுகுறித்து என்ன தகவல் என்று பார்த்தால் விஷயமே வேறு.

சோம சேகரின் தம்பிக்கு அண்மையில் குருவாயூரில் திருமணம் நடந்துள்ளது, புகைப்படங்களும் வெளியாகின. அந்த தகவல் அப்படியே சோம சேகருக்கு திருமணம் என பரவ தொடங்கியுள்ளது.