எத்தனை வாட்டி பார்த்தாலும் திகட்டாத பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் புகைப்படம்!!

131

பிரியா பவானி சங்கர்….

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவிட்டு அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.

பல வருடங்கள் கழித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மாபியா. மான்ஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது இவர் கைவசம் ஆக இந்தியன் 2 மற்றும் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் உள்ளன. சமீபத்தில் கூட இவரது 10 வருட காதலை வெளிப்படுத்தும் வகையில் தன் காதலருடன் ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மாடல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர். தற்போது இவர் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் சேலை அணிந்தபடி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வாவ் செம க்யூட், செம அழகு, அழகோ அழகு என பிரியா பவானி ஷங்கரை பிடிக்கும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் மாடல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டால் அழகாகத்தான் இருப்பீர்கள் ஏன் புடவைக்கு மாறிவிட்டீர்கள் எனவும் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.