ஆஸ்காருக்கு அவங்களே கூப்பிடலயாம், காசுக்கட்டி அனுப்பினாரா சூர்யா?

121

சூர்யா…

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆஸ்கார் விருதிற்கு ஒரு படத்தை அனுப்ப நிறைய செலவு செய்ய வேண்டும் என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் யாருமே மறுக்க முடியாத திரைப்படமாக மாறியது சூரரைப் போற்று. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, நடிப்பு என அனைத்து துறைகளிலும் கோலோச்சியது. இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியான திரைப்படம் எப்படி ஆஸ்காருக்கு தகுதி பெற்றது என்பது ரசிகர்களின் முதல் கேள்வி. அடுத்ததாக ஆஸ்கார் விருதுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது என்பதுதான்.

ஆஸ்கர் விருதில் பங்குபெற வேண்டும் என்றால் அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் அந்த படம் ஓடியிருக்க வேண்டுமாம். ஆனால் கடந்த வருடம் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் OTTயில் வெளியான படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய ஒத்த செருப்பு படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பினார். அவரிடம் ரசிகர் ஒருவர் ஆஸ்கார் விருதுக்கு எப்படி அனுப்புவது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்காமல் ஒன்றும் வேலைக்கு ஆகாது எனும் அளவுக்கு ஒரு பதிலைக் கூறி உள்ளார் பார்த்திபன்.

அதாவது ஒரு படத்தை ஆஸ்கார் நாமினேசன் லிஸ்ட்க்கு அனுப்பவே கிட்டத்தட்ட 3.5 கோடி வரை செலவு செய்ய வேண்டுமாம். அப்போதுதான் நாமினேஷனில் இடம் பெறுமாம். அதன்பிறகு வெற்றி பெறுவதெல்லாம் லக் தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்காருக்கு தன்னுடைய படத்தை அனுப்பியவர் என்ற முறையில் பார்த்திபன் கூறியதை வைத்து பார்த்தால், கண்டிப்பாக சூரரைப்போற்று படக்குழுவினர் பணம் கட்டி தான் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்கார் விருதும் பணம் வாங்கிக்கொண்டு செயல்படும் நிறுவனம் தான் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. இதுக்கு நம்ம விஜய் டிவி அவார்டு பரவாயில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.