பாலாஜி-யாஷிகா…
என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் பாலாஜியின் மவுசு குறையாததற்கு அவர் இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே சாட்சி. அதேபோல் பாலாஜி கோலிவுட்டில் இளம் நடிகராக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் மற்றும் பாலா ஆகியோருக்கு இடையேயான உறவைப் பற்றி யாஷிகாவின் தாயான சோனல் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது யாஷிகா ஆனந்த்-தும் பாலாஜியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விஜய் டிவியின் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு நெட்டிசன்கள் பலர் யாஷிகாவிற்கும் பாலாஜிக்கும் இடையே காதல் உள்ளதாக கிசுகிசுத்து வருகின்றனர்.
மேலும் யாஷிகா இதனை பலமுறை மறுத்தும், இந்த தகவல் இணையத்தில் தீ போல் பரவி கொண்டுதான் இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது யாஷிகாவின் தாயான சோனல் பிரபலமான பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் சோனல், ‘பாலாஜியும் யாஷிகாவும் அண்ணன் தங்கை போன்றவர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.