கதை தி ரு ட்டு வ ழ க்கில் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் – கை து ஆகிறாரா பிரமாண்ட இயக்குனர் !

76

ஷங்கர்…

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர்.

அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரம்மாண்ட படம்களுக்கு விதை போட்ட இயக்குனர் ஷங்கரின் பாதைதான் இன்று பல இயக்குனர்கள் Follow செய்யும் Method.

இந்தநிலையில் 2010- ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைபடத்தின் கதை தாம் எழுதிய கதை என்னும் அந்த கதை திருடப்பட்டு, ஷங்கர் அந்த படத்தை இயக்கியது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கதை திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகாத நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. இதனால் ஷங்கர் கைது ஆவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.