OTT…

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றதால் ரசிகர்கள் அனைவரும் தற்போது வரையில் இப்படத்தை கொ ண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர், திரையரங்கில் வெளியான பின் அமேசான் பிரைமில் 29 தேதி வெளியானது.

மேலும் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை சூரரை போற்று முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆம், சூரரை போற்று படம் முதல் நாளில் 55 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதாகவும், மாஸ்டர் முதல் நாளில் 66 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


