முக்கிய நபர் மரணம்! இளையராஜாவின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

611

இளையராஜா…

இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மக்கள் அனைவரையும் கவர்ந்தவர். அவரின் பாடல்கள் பலரையும் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் போல கட்டிப்போட்டுவிட்டன.

அவருக்கான ரசிகர்கள் ஆதரவு எப்போதும் அமோகம் தான். அவர் தனக்கென ஒரு பெரும் இசைக்குழுவை வைத்துள்ளார். இதில் பல கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் இளையராஜாவின் ஆஸ்தான கலைஞராக இருந்த சசிதரன் அதிக பாடல்களுக்கு பாஸ் கிடார் வாசித்துள்ளார்.

இந்நிலையில் சசிதரன் நேற்றுமுன்தினம் காலமாகியுள்ளார். இசை கலைஞர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சசிதரன் இளையராஜாவுடைய மனைவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.