மாஸ்டர் படத்தின் இந்த விசயம் தெரியுமா? இதுவரை எந்த படமும் செய்யாதது!

142

மாஸ்டர்…

மாஸ்டர் படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விஜய்யின் இந்த படத்திற்கும் ரசிகர்கள் வழக்கம் போல சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அனிருத்தின் வாத்தி கம்மிங் பாடல் இசையும், விஜய்யின் நடனமும் பலருக்கும் பிடித்து போனது. மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். பாக்ஸ் ஆஃபிஸில் படம் நல்ல வசூலும் ஈட்டி வந்தது.

ஓடிடி தளத்தில் இப்படம் ரூ 36 கோடிக்கு விற்கப்பட்டது. கடந்த ஜனவரி 29 ம் தேதி படம் பிரிமியர் செய்யப்பட்டது. இதற்கு கடந்த இரண்டு வாரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் கூடுதலாக ஓடிடி மூலம் படத்திற்கு ரூ 15 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக ரூ 51 கோடி ஓடிடி தளத்தில் மாஸ்டர் வசூலித்துள்ளது. இதுபோல வேறு எந்த இந்திய படத்திற்கும் இதுவரை Streaming Rights விலை கிடைக்கவில்லையாம். மாஸ்டர் படம் இப்படியான ஒரு சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.