பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தொடங்கியது!

450

ஆதிபுருஷ்…

பிரபாஸ் மற்றும் சயிப் அலிகான் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.

3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத் சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.

ஆதிபுருஷ்’ திரைப்படம் 2022, ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.