தளபதி 65 படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த கதாநாயகி.. வாய்ப்பை உதறித்தள்ளியது ஏன்?

123

தளபதி 65…

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது தளபதி 65 படத்தை நடிக்கவுள்ளார்.

இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ரஷ்மிகா மந்தானாவிடம் பேச்சு வார்த்தை சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கருப்பன் பட கதாநாயகி தான்யா ரவிச்சந்திரனிடம் நடிக்க முடியுமா என படக்குழு கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை தான்யா ரவிச்சந்திரனிடம் தளபதி 65 படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி வாய்ப்பை மறுத்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.