தன்னுடைய Glamour போட்டோவை கேட்ட ரசிகர் – உடனே அனுப்பிய நடிகை மஞ்சிமா..! – வைரல் போட்டோ..!

143

மஞ்சிமா மோகன்…

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

கேரளாவில் பிறந்தவரான நடடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நிவின் பாலியுடன் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் விக்ரம் புறப்புக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.

அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இடையில் நடந்த ஒரு ஆக்சிடெண்ட் காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்தடுத்து துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்த படங்கள் தமிழில் இருக்கின்றன. இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் மஞ்சிமா மோகனிடம் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை அனுப்பு சொல்லி கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் தாமதிக்காமல் மஞ்சிமா மோகன் தனது குழந்தை வயது புகைப்படத்தை அனுப்பி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.