மாஸ்டர் படத்தில் வரும் JD விஜய் போல் மாறிய பிக்பாஸ் கவின், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் இதோ..!

671

கவின்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மேலும் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆன பிறகும் கூட மாஸ்டர் குறித்து பலரும் பகிர்ந்து வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முலம் பிரபலமான கவின் தற்போது மாஸ்டர் படத்தில் JD விஜய் போல் கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, ஹெட் செட் உள்ளிட்டவை அணிந்திருக்கும் பேன் மேட் புகைப்படம் வெளியாகியுள்ளது.