100 கோடி கணக்கில் லாபத்தை கொடுத்த மாஸ்டர் திரைப்படம்.. மாபெரும் சாதனை படத்தை விஜய்..!

131

மாஸ்டர்..

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஆம் தற்போது வரை இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 180 கோடியும், வெளிநாடுகளில் 42 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டு வசூல் மூலம் சுமார் 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

அது மட்டுமின்றி படத்தின் சாட்டிலைட் உரிமம் மூலம் 30 கோடி, ஓடிடி தளங்கள் மற்றும் இணையதளங்கள் 50 கோடி, இசை மற்றும் மற்ற உரிமைகள் 5 கோடி கிடைக்க உள்ளதாக தெரிகிறது.

மொத்த வருமானம் 332 கோடி ரூபாயில் படத்தின் பட்ஜெட் 150 கோடி போக தியேட்டர் வருமானம், மேலே குறிப்பிட்ட மற்ற வருவாய் என 100 கோடி முதல் 120 கோடி வரை மாஸ்டர் படத்தின் வசூல் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.