ஒரே நாளில் இத்தனை மில்லியன்-ஆ..! மாஸ்டர் படம் OTT-யில் படைத்து வரும் மாபெரும் சாதனை!!

76

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மாஸ்டர் படம் இதுவரை 220 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானது, இப்படம் OTT தளத்தில் வெளியானாலும் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படம் OTT-யில் வெளியான முதல் நாளில் 9.2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மாஸ்டர் படத்தை 28 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.