ஷிவானி நடிக்கும் புதிய சீரியலில் ஹீரோ பாலாஜி முருகதாஸ்..! மீண்டும் இணையும் பிக்பாஸ் ஜோடி..?

107

பாலாஜி – ஷிவானி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை முடிவடைந்துள்ளது, இதில் அனைவரும் எதிர்பார்த்தது போல ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை சென்ற ஷிவானி தற்போது விஜய் டிவி-யில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.

கடைசியாக ஷிவானி கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து கொண்டு இருந்த போது, அவர் பாதியிலே கோபித்து கொண்டு வெளியேறினார்.

மேலும் தற்போது தொடங்க உள்ள புதிய சீரியலில் அவருக்கு ஜோடி, ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் நடித்த அஸீம்தான் என தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு சிலரோ பிக்பாஸ் ரன்னர் பாலாவுக்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். சில பட வாய்ப்புகள் பாலாவுக்குக் கிடைத்துள்ள நிலையில், இந்த தொடரில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.